×

முன் களப்பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில், தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்களப்பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், மாநில தலைவர் ஜெயவேல் தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் சுதா வரவேற்றார். பொதுச்செயலாளர் சதீஷ், துணை செயலாளர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்கள பணியாளர்களுக்கு, விடுமுறையுடன் கூடிய மாதஊதியம் ₹22ஆயிரம் வழங்க வேண்டும். பணி வரன்முறை மற்றும் பணி பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிபடி பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த டெங்கு கொசுப்புழு ஒழிப்பு முன்கள பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

The post முன் களப்பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : -Field Workers Union ,Namakkal ,Tamil Nadu Dengue Mosquito Eradication Front Workers Association ,Jayavel.… ,Front Field Workers Association ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...